அலெக்ஸ் 21

Alex21

அலெக்ஸ் 21

21 அலெக்சாண்டரின் அல்லிக்கொடி!!

வாசலில் அவ்வளவு பெரிய உருவமாக அலெக்சாண்டர் நெப்போலியன் நிற்க... இறங்கி வந்த அவன் மனைவியோ , தன் தாயை மட்டும் பார்த்து தலை அசைத்துவிட்டு ஹாலில் போட்டிருந்த மிகப்பெரிய நாற்காலியில் போய் அமர்ந்து கொண்டாள்..

"எக்கா உன் மகளுக்கு சொல்லி வச்சிடு, இப்படி புருஷனுக்கு மரியாதையே இல்லாம நடந்துகிட்டு இருந்தான்னு வை , 

"என்ன செய்யப் போற, பெருசா பொண்டாட்டி மேல கோவம் இருக்கிறவன் மாதிரி பேசாதடா, நேத்து ராத்திரி முழுக்க பொண்டாட்டிக்காக இந்த பேண்ட் சட்டை போட்டு ஆயிரம் நேரம் பார்த்து மினுக்கிட்டு வந்த, அவ உன்ன கண்டுக்கலைன்னு கோவம் வருது அப்படித்தானே

"அப்படியும் வச்சுக்கலாம், கொஞ்சமாவது கடைக்கண் பார்வையாவது பார்த்தாளா பாத்தியா அவளுக்காக இதை எவ்வளவு கஷ்டப்பட்டு , வேர்க்க வியர்க்க போட்டு இருக்கேன், சுதந்திரமா வேட்டியை கட்டியை ஏத்தி கட்டி நடந்த என்ன இப்படி குழாய் சட்டை எல்லாம் போட வச்சுட்டா... சரி ஒரு பார்வை பார்க்கலாம்தானே இறுமாப்பு புடிச்ச பொண்ண பெத்து வச்சிருக்க..

"ஹாஹா, என்ன சண்டை போடுறதா இருந்தாலும் பிள்ளை பெத்து அவ சுகமா வந்த பிறகு போடுடா நான் அப்போ வழக்கு பிடிக்க வரவே மாட்டேன்.. இப்போ கொஞ்சம் பொறுத்துப்போயேண்டா தம்பி அவன் நாடி பிடித்து கொஞ்ச உனக்காக பொருத்து போயேன் என்று ஸ்ரீதேவி சொல்ல.. அவன் கண்கள் முழுவதும் பட்டுசேலையில் வெடித்த மல்லிகை மலர் போல அமர்ந்திருந்த மனைவி மீதுதான்..

சேலை கசகசவென வந்தது புருசனுக்காக கட்டி விட்டாள் .. ஆனால் உடல் அதை ஏத்துக்கொள்ள வில்லை சுதந்திரமா விடேன் என்று கெஞ்சியது 

புருசன் ரியாக்ஷன் பரம திருப்தி.. பங்சன் முடிந்ததும் அதை கழட்டி வீசணும் , ப்பபா இது எல்லாம் டெய்லி கட்டணுமா நோ நெவர் ..நிலையில் அவள் 

புருசன் யாமினி மீதே கண் இரண்டையும் குத்தகைக்கு கொடுத்திருந்தான்...  

இவ்வளவு அழகையும் அரைகுறை டிரஸ்ல மறைச்சு வைத்திருந்தாளே என்னா அழகா இருக்கா, நெட்டி முறிக்க தோன்றியது..

ஆரம்பிச்சுடுவோமா?? என்று நல்லபெருளாள் கேட்கவும்

"என்னது ஆரம்பிச்சிடுவோமா, வெறும் சேர் மட்டும் போட்டு வச்சா போதுமா, வளைகாப்பு இப்படியா நடத்துவாங்க , சரி வளையல் எங்க ??என்று ஸ்ரீதேவி இடுப்பு சேலையை சொருகிக்கொண்டு கணவனை பார்த்து கேள்வியாக கேட்க..

"அது தங்க வளையல் வாங்கி வச்சிருக்கேன்..

"ப்ச், கண்ணாடி வளையல் போட்டா அந்த கண்ணாடி வளையல் சத்தம் கொடுக்கும் போதெல்லாம் உள்ள இருக்க குழந்தைக்கு துடிப்பு அதிகமாகும் அம்மா நம்மகிட்ட ஏதோ பேசுறாங்கன்னு ஆர்வமா வெளி உலகத்தை பார்க்க ஆசைப்படும்.... தங்க வளையல்ல என்ன சத்தம் வரப்போகுது , 

"நான் போய் வாங்கிட்டு வரவா

"வேண்டாம், நீங்க இப்படித்தான் ஏதாவது செய்வீங்கன்னு தெரிஞ்சு நானே ஊர்லயே வாங்கிட்டு வந்துட்டேன் .. வெத்தல பாக்கு குங்குமம் சந்தனம் எல்லாத்தையும் நானே பார்த்து பார்த்து வாங்கிட்டு வந்துட்டேன்.. நெப்போலியன் எடுத்துக்கொண்டு வந்து யாமினி மூன்னால் குனிந்து வைத்தவன் பார்வை அவள் கால்களில் வீக்கத்தில் மேல் இருந்தது. சாதாரண கணவன் மனைவியாக இருந்திருந்தால் இப்போது அவள் காலை பிடித்து வருடி கொடுத்திருப்பான்... அவள் தான் வீஞ்சி கொண்டு இருக்கிறாளே.. 

"என் மக ரொம்ப கஷ்டப்படுத்தறா போல இருக்கு கால் எல்லாம் வீங்கி போச்சு , சரி அவளாவது கஷ்டப்படுத்தட்டும் இல்லேன்னா இவளுக்கு கஷ்டம்னா என்னன்னே தெரியாம போயிடும் என சமாதானம் செய்து கொள்ள 

"எய்யா நெப்போலியா முத வலையில நீ வந்து போடு என்றதும் நெப்போலியன் தன் பேண்ட் பாக்கெட் தடவி வைர வளையலை எடுத்து அக்காவிடம் வழிந்து கொண்டே காட்ட ..

இது எப்போடா வாங்கின ??

"அவ உண்டானதும் பெரிய சீட்டு போட்டு வாங்கிட்டேன் ... போட்டு விடவா

"போடு போடு என்றதும் நல்லபெருமாள் மனைவியை பார்த்து முறைக்க

"முழுக்க தங்க வளையல் போடக்கூடாதுன்னு தான் சொன்னேன் எல்லாம் கலந்து கட்டி போடலாம் நீங்களும் தங்க வளையல் போட்டு விடுங்க .. 

தன் மனைவி அருகே போய் நெப்போலியன் யாமனி கன்னத்தில் சந்தனம் தடவ அவனை அண்ணாந்து பார்த்தாள்

பார்வை ஒருவரை கொல்லுமா, இரட்டை கண்கள் ஒருவரிடம் போர் செய்யுமா?? கருவிழிகள் ஒருவனை சாய்க்குமா.. சாய்த்ததே !கொன்றதே! 

அண்ணாந்து பார்த்தவள் அவன் மீசை அழகில் மயங்கி போனாள்... சுருங்கிய நெற்றி கொடுவா மீசை, காந்த பார்வை கர்வம் பிடித்த ஒருத்தியை பெண்ணாக மாற்றுமா? மாற்றியதே?? குனிந்து நின்றவன் புலி நகம் வந்து அவள் மீது உரசாமல் உரச ,அவன் கழட்டி விட்டிருந்த சட்டையில் அவன் நெஞ்சு முடி சுருண்டு சுருண்டு இருக்க மோகத்தில் அதை பிடித்து இழுத்த கனங்கள் எல்லாம் மறுமுறை அவள் கண்முன் வந்து போக அப்படியே அவன் சட்டையை இழுத்து உதட்டோடு உதடு பொருத்தி 

ஏனடா என்னை வந்து பார்க்கவில்லை, உனக்காக காத்திருந்தேன் தெரியுமா என்று முத்தத்தின் வழியாக ஊடல் செய்ய ஆசைதான் .. ஆனால் ஏதோ ஒன்று தடுத்ததே !!

வளையலை பூவாக அவள் கைகளில் மாட்டியவன்

"கால்ல மெட்டி ரொம்ப இறுகலா கிடக்குதுன்னு நினைக்கிறேன் அதான் கால் வீங்கி இருக்கு" 

"ஆக மெட்டியும் வாங்கிட்டு வந்து இருக்கேன்னு சொல்ற அப்படிதான்" என்ற அக்காவின் கேலியில் தலையை சொரிந்தவன் சட்டை பாக்கெட்டில் இருந்த இரண்டு மெட்டியை எடுத்து அவள் கால்களை தூக்க போக , யாமினியே தன் கால்களை எடுத்து நெப்போலியன் தொடையில் ஜம் என்று வைத்து போடு என்னும் விதமாய் காட்ட..

குட்டி குட்டி பரிசுகளும் சந்தோஷங்களும் தானே காதலை நிறைவாக்க தேவையானது ... 

நான் உன்னை காதலிக்கிறேன் என்று நிமிடத்திற்கு நிமிடம் சொல்வதை விட அவள் நினைவாக நான் இருக்கிறேன் என்பதை காட்டுவதற்காக சில நேசங்களை வெளிப்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தாலே, அந்த காதல் காலத்திற்கும் அழியாது ... 

அவள் காலில் கிடந்த வெள்ளி மெட்டியை கழட்டி விட்டு தங்க மெட்டியை போட்டு அழகு பார்த்தான்...

 நீயே போட்டுக்கிட்டு இருந்தா போதுமாடா அவரும் வளையல் போட வேண்டாமா அவ பக்கத்துல உட்காரு என்று இரண்டு பேர் உட்காரும் சோபாவில் இருவரும் சற்று விலகி விலகி அமர்ந்து கொண்டனர்..

 நல்லபெருமாள் இரண்டு ஜோடி வளையல்களில் ஒன்றை மனைவி கையில் கொடுத்து ..

வா ரெண்டு பேரும் போடுவோம் என்று அழைக்க மறுக்கவில்லை.. ஓடி வந்து கணவன் கைப்பிடியில் நின்று கொண்டு மகள் கையில் வளையலை போட்டு தம்பதியாக இருவரையும் வாழ்த்தினர்..

சாப்பாடு ஏதாவது ஹோட்டல்ல இருந்து வர வைக்கவா என்று நல்லபெருமாள் கேட்க

மசக்கையான பிள்ளைக்கு ஹோட்டல்ல இருந்து சாப்பாடா ? ஏன் வீட்ல வேலை செய்றவங்க எல்லாம் இல்ல 

"இன்னைக்கு எல்லாருக்கும் விடுப்பு கொடுத்து அனுப்பி விட்டுட்டேன்.

"மனைவி கையால் சாப்பிட ஆசை என்று சொல்ல அவருக்கு கூச்சம் , அதோடு இந்த தனிமையான நேரங்களில் மூன்றாவது நபர் வேண்டவே வேண்டாம் என்று விரட்டி விட்டு விட்டேன் என்று சொல்ல வெட்கம்...

"ஓஓஓ நான் சமைக்கவா 

"உனக்கு ஏன் ??

"எனக்கு ஏன் என்று ஸ்ரீதேவி கணவனை பார்க்க 

"கிச்சன் அந்த பக்கம்..

"ம்ம் 

"என்ன வேணும் 

எதாவது 

"உங்களுக்கு என்ன வேணும்னு கேட்டேன் 

"சாம்பாரும் கிழங்கு பொறியலும் வச்சி தர்றியா?? 

ம்ம் வயது மறந்து ஓடும் மனைவி பின்னே ஓட ஆசை கொண்டவர் 

"அவளுக்கு எங்க என்ன இருக்கும்ன்னு தெரியாதுல்ல எடுத்து கொடுத்துட்டு வர்றேன் கண்ணா என்று மகள் பதிலுக்கு காத்திருக்காது ஸ்ரீதேவி பின்னே ஓடியே விட்டார் .. 

"நான் அவர் பொண்டாட்டி தானே எவளோ போல தயங்கிட்டு இருக்கார்... இதுவும் நம்ம வீடுன்னு நினைச்சு தானே நான் ஓடி வந்தேன்... அது என்ன எதாவது செஞ்சு தா, எது வேணும்டி கேட்க வரல அந்த உரிமை இல்லையா என்ன? அப்போ இன்னும் என் மேல வருத்தம் தான் போல ... என்று புலம்பி கொண்டே சமையலை தொடங்கிய ஸ்ரீதேவி இடையில் ஒரு கரம் நுழைய பதறி திரும்பிட நல்லபெருமாள் மிக நெருக்கமாக நின்றார்...

"நீ என் பொண்டாட்டி தான் போதுமா?? என்றவர் கைகள் இன்னும் அழுத்த .. அவர் கைப்பட்டு வயது கடந்தும் பூப்பெய்தியது பெண்மை!!  

"இதை சொல்ல இவ்வளவு நாளா? முகம் மலர மனைவி கணவனை அண்ணாந்து பார்க்க.. 

 "ஆக்கிட்டேனே, தப்பு பண்ணிட்டேனே மன்னி என்றவர் உதட்டை அவள் விரல் மூடி 

"ம்ஹூம் போதாக்காலம் முடிஞ்சு போச்சு மன்னிப்பு கேட்டு மறுபடியும் தள்ளி நிறுத்தி புடாதீக அத்தான் 

"ம்ம் ...

"ஊருக்கு மறுபடி போகாதடி இங்கேயே இருக்கியா.. 

"அது என்ன இருக்கிறியா , இருடின்னு சொன்னா ஆகாதா ஸ்ரீதேவி அவர் நெஞ்சில் சாய

"இரு , நெப்போலியன் காட்டானை எதாவது சொல்லி சமாளி...

ம்ம் அவன் என்ன சொல்ல போறான் இனிமே அங்கேயே இருக்கான்னு சொன்னது அவன்தேன்... உங்களுக்குதான் அவன் எதிரி போல தெரிவான் போல.. அவன் அப்பவும் இப்பவும் அத்தான்னா மரியாதை வச்சிதான் பேசுவான் ... 

சரி சரி விடு இந்த சேலையில ரெண்டு வயசு குறைஞ்சது போல இருக்கே" அவர் மையல் கொண்டு குனிந்து மனைவியை பார்க்க ..மீசை கன்னத்தை வருட சற்று கூச்சம் தான் 

"சரி விடுங்க சமைக்கணும் "விடாத என்று குரல் சொன்னது.. 

"எனக்கு முத்தம் வேணுமே 

"என்ன அவர் பதற 

"நீதான சொன்ன உரிமையா கேட்டு வாங்கணும்னு எனக்கு இப்போ முத்தம் வேணும் ராத்திரி நீயும் வேணும் கட் அண்ட் ரைட்டாக கூற 

"ஏதே மாட்டேன் 

"மாட்டியா தர்ற , நீயும் நானும் ஒரு ரூம் தான்...  

"அச்சோ போங்க மக என்ன நினைப்பா ? 

என்னவும் நினைக்கட்டும் , இந்த கிழவி எனக்கு வேணும் 

"கிழவனுக்கு ஆசையை பாரு "என்று வாய் சொன்னாலும் ஸ்ரீதேவிக்கும் உற்சாக உதடு கடிப்பு வந்தது ... 

"நைட் வர தாங்குற மாதிரி ஒன்னு கொடு 

:ம்ஹூம் ..

கிழவி சரிபட்டு வர மாட்ட என்று ஸ்ரீதேவி திமிரும் முன் அவரை திருப்பி சுவற்றில் சாய்த்த நல்லபெருமாள் பார்வை மனைவியை மேலிருந்து கீழ் வரை கொஞ்சம் கொஞ்சமாக வருடி கொண்டே வர அதன் தாக்கம் தாங்க முடியாத ஸ்ரீதேவி கைகள் கணவன் சட்டை காலரை பிடித்து கசக்க 

"நியாபகம் இருக்காடி உன் வீட்டுல இப்படி தான் கள்ளத்தனமாக உன் தம்பி கண்ணை மறைச்சு உன்ன சீண்டுவேன் "

"ம்ம் அந்த நியாபகம் எல்லாம் தான் நான் இன்னும் வாழ காரணம் அத்தான் ...

"என்னடி முடிஞ்சு போச்சு , வயசுதானே போச்சு காதல் போகலையே இனி காதலிக்கலாம்

ம்ம் என்று அண்ணாந்து பார்த்த மனைவி உதட்டை பொறுமையாக நல்லபெருமாள் விழுங்க.. அவர் இடையோடு இறுக்கி கொண்ட மனைவி உயரம் எப்போதும் முத்தத்திற்கு தடை தான் என்று அறிந்த நல்லபெருமாள் மனைவியை அலேக்காக தூக்கி கொண்டு கண்ணடிக்க அவர் கொடுத்த இதழை கவ்வி கொண்டு இவரும் கன்னம் சிவக்க.... 

யக்கா நெப்போலியன் குரலில் இருவரும் பதறி விலகிட 

ப்ச் கரடிப்பய அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை இவனுக்கு அறிவே வளரல புருசன் பொண்டாட்டி இடையில நுழையிறதே வேலையா வச்சிருக்கான் என்று திட்டி கொண்டே வெளியே போக மனைவி முகம் அவர் தந்த முத்த மயக்கம் தெளியாது நின்றார்..

பேசி தீர்க்க வேண்டியதை, பேசாதே விட்டு வாழ்க்கையை கோட்டை விட்டு விட்டனர்..